• vilasalnews@gmail.com

பாப்புலர் பிரண்ட் இந்தியாவுக்கு 3 மாதத்துக்குள் ரூ. 100 கோடி பரிமாற்றம்! - நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தகவல்

  • Share on

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கு கேரளாவில் இயங்கி வரும் பாப்புலர் பிரண்ட் அமைப்புக்கு 100 கோடி ருபாய் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த கட்சியின் செயல்பாடு, சட்டவிரோதமாக இருப்பதாக கேரள அரசு குற்றம் சாட்டி வருகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு,  மத்திய பிரதேச மாநிலம் தெக்கன்பூரில் வருடாந்திர மாநில டி.ஜி.பிக்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில்,பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் அனைத்து மாநில காவல்துறையை சேர்ந்த டிஜிபிக்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட கேரள டிஜிபி லோகநாத் பெஹரா, கேரள மாநிலத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கட்சியின் வளர்ச்சி மற்றும் நடவடிக்கை குறித்து பேசினார். அந்த கட்சியின் குற்றவியல் நடவடிக்கைகள் குறித்து மூத்த பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் பட்டியலிட்டதோடு தடை செய்வதே நல்லது என்ற கருத்தையும் அவர் முன் வைத்தார்.

  • Share on

நேதாஜியின் பிறந்தநாளை கோலாகலமாகக் கொண்டாட உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் குழு

ஜம்மு காஷ்மீரில் மூன்று பாக். தீவிரவாதிகள் கைது

  • Share on