ஒடிசாவில் 4 நாட்களில் இரண்டாவது முறையாக ஏவுகணை சோதனை
இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு கழக விஞ்ஞானிகள் கியூ.ஆர்.சாம் எனப்படும் நவீன உள்நாட்டு ஏவுகணைகளை தயாரித்துள்ளனர் இந்த ஏவுகணை வான்வழி இலக்கை துல்லியமாக தாக்கியது.
ஒடிசா மாநிலம் சண்டிபூரில் உள்ள சோதனை மையத்தில் நேற்று பிற்பகல் 3.45 மணிக்கு இந்த ஏவுகணையின் இரண்டாம் கட்ட சோதனை நடத்தப்பட்டது.
ரேடார் மூலமாக நீண்ட தூரத்திலிருந்து வரும் வான் இலக்கை பெற்று தானியங்கி முறையில் கணினியே ஏவுகணையை செலுத்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டிருந்தது.திட்டமிட்டபடி இலக்கை தாக்கி ஏவுகணை சோதனை வெற்றி அடைந்ததாக ஆராய்ச்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
கியூ.ஆர்.சாம் ஏவுகணையின் முதல் கட்ட சோதனை கடந்த 13 ஆம் தேதி நடத்தப்பட்டது. தற்போது 4 நாள் இடைவெளியில் மீண்டும் சோதித்து பார்க்கப்பட்டுள்ளது. வெற்றிகரமான இந்த சோதனைக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், டிஆர்டிஓ விஞ்ஞானிகளை வாழ்த்தினர்.