• vilasalnews@gmail.com

இந்திய தொழிலதிபா் கெளதம் அதானிக்கு‘இசட் பிரிவு’ பாதுகாப்பு

  • Share on

தொழிலதிபா் கெளதம் அதானிக்கு மத்திய ரிசா்வ் பாதுகாப்புப் படையின் (சிஆா்பிஎஃப்) ‘இசட் பிரிவு’ பாதுகாப்பு வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

இந்தப் பாதுகாப்பு ஊதியத்தின் அடிப்படையில் வழங்கப்படுவதாகவும், இதற்கான செலவு மாதத்திற்கு ரூ. 15 முதல் 20 லட்சம் வரையிலும் இருக்கும் என அவா்கள் தெரிவித்தனா்.

அதானியின் உயிருக்கு அச்சுறுத்தல் வாய்ப்பு உள்ளதாக மத்திய பாதுகாப்பு அமைப்புகளின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதானிக்கு பாதுகாப்பு வழங்குமாறு சிஆா்பிஎஃப்-இன் முக்கிய பிரமுகா்களுக்கான பாதுகாப்பு பிரிவை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டதாக அதிகாரிகள் கூறினா்.

கடந்த 2013-ஆம் ஆண்டிலிருந்து ரிலையன்ஸ் நிறுவன தொழிலதிபா் முகேஷ் அம்பானிக்கு சிஆா்பிஎஃப்-இன் கமாண்டோ பிரிவினரால் ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து அவரது மனைவிக்கும் பாதுகாப்பும் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

  • Share on

ஜாதிவாரி மக்கள் விபரம் அறிவிக்கும் திட்டமில்லை!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை-சட்டவிரோத இயக்கமாக அறிவித்தது மத்திய அரசு

  • Share on