• vilasalnews@gmail.com

நேதாஜியின் பிறந்தநாளை கோலாகலமாகக் கொண்டாட உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் குழு

  • Share on

சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125 வது ஆண்டு விழாவை கோலாகலமாகக் கொண்டாடுவோம் என்று டிவிட்டர் மூலம் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

ஜனவரி 23ம் தேதி நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாட பாஜகவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

வரலாற்றாளர்கள், அறிஞர்கள், நிபுணர்கள், நேதாஜியின் குடும்ப உறுப்பினர்கள், நேதாஜி உருவாக்கிய ஆசாத் ஹிந்த் ஃபெளஜ் ராணுவப் படையுடன் தொடர்பு கொண்டவர்கள் இந்தக் குழுவில் இடம்பெறுவார்கள்.

வெளிநாடுகளிலும் நேதாஜியின் பிறந்ததினக் கொண்டாட்டங்களுக்கு இந்தக் குழு வழிகாட்டுதல்களை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share on

டெல்லியில் விவசாயிகள் இன்று முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்

பாப்புலர் பிரண்ட் இந்தியாவுக்கு 3 மாதத்துக்குள் ரூ. 100 கோடி பரிமாற்றம்! - நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தகவல்

  • Share on