'கடந்த, 2011ல் எடுக்கப்பட்ட சமூக, பொருளாதாரம் மற்றும் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பில், ஜாதிவாரி மக்கள் குறித்த விபரங்களை தற்போது வெளியிடும் திட்டமில்லை' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
நேற்று லோக்சபாவில் மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த் ராய் பேசியதாவது:
நாடு சுதந்திரம் அடைந்தது முதல், மக்கள் தொகை கணக்கெடுப்பில் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் விபரங்கள் தான் சேகரிக்கப்படுகின்றன. ஜாதி வாரி மக்கள் தொகை விபரங்கள் திரட்டப்படுவது இல்லை.
அதன்படி, 2011ல் எடுக்கப்பட்ட சமூக பொருளாதாரம் மற்றும் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பில், ஜாதிவாரி விபரம் நீங்கலாக, அனைத்து தகவல்களும் http:ecc.gov.in என்ற வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த, 2019ல், '2021ம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்' என, அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக இத்திட்டம் அடுத்த அறிவிப்பு வரும் வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.