மக்களவை உறுப்பினர்கள் ஜோதி மணி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட நான்கு காங்கிரஸ் எம்பிக்களை இடை நீக்கம் செய்து, சபாநாயகர் ஓர்பிர்லா உத்தரவிட்டுள்ளார்.
மக்களவையை நடத்த விடாமல் இடையூறு செய்வதாக கூறி, ஜோதி மணி, மாணிக்கம் தாகூர், பிரதாபன், ரம்யா ஹரிதாஸ் உள்ளிட்ட நான்கு காங்கிரஸ் எம்பிக்கள் இடை நீக்கம் செய்து, சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். அவையின் மையப்பகுதிக்கு வந்து அவையை நடத்த விடாமல் முழக்கங்கள் எழுப்பியதால், நாடாளுமன்ற கூட்டத்தொடர் முழுவதும் நால்வரும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிப்பு.