இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் வேகமாக வளர்ந்து வரும் நிலையில் ரீடைல் கடைகளும், வியாபாரிகளும் தங்களது வர்த்தகத்தைத் தொடர்ந்து இழந்து வருகின்றனர்.
இது நீண்ட காலமாக இருக்கும் ஒரு பிரச்சனை, இதேவேளையில் மாநிலத்தின் வர்த்தகம் வருவாய் அதிகரிக்கவும், சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும் டெல்லி அரசு முக்கியமான திட்டத்தை அறிவித்துள்ளது.
இத்திட்டம் மூலம் ஈகாமர்ஸ் துறையின் ஆதிக்கம் இந்திய ரீடைல் சந்தையில் குறைய அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது என்றால் மிகையில்லை.
ஈகாமர்ஸ் தளத்தில் வாடிக்கையாளர்களை அதிகரிக்கவும், தக்கவைக்கவும், வர்த்தகம் மற்றும் வருமானத்தைக் கூட்டவும் வருடம் ஒரு முறை நடத்தப்பட்ட தள்ளுபடி விற்பனை தற்போது வருடத்திற்கு 2 - 3 முறை நடத்தப்படுகிறது. இதேபோல் ரீடைல் விற்பனை சந்தையின் வர்த்தகத்தை ஊக்குவிக்க டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரம்மாண்ட அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
2023 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் தேதி முதல் பிப்ரவரி 26 ஆம் தேதி வரை 30 நாள் டெல்லி ஷாப்பிங் திருவிழா நடத்தப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அறிவித்துள்ளார்.
இது இதுவரை இந்தியாவிலேயே மிகப்பெரிய ஷாப்பிங் திருவிழாவாக இந்த 30 நாள் டெல்லி ஷாப்பிங் திருவிழா இருக்கும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்
30 நாள் டெல்லி ஷாப்பிங் திருவிழா-விற்கான பணிகளை இப்போது தொடங்குகிறோம். இன்னும் சில வருடங்களில் இது உலகின் மிகப்பெரிய ஷாப்பிங் திருவிழாவாக மாற்றுவோம் எனத் தான் நம்புவதாக டெல்லி முதல்வர் கூறியுள்ளார்.
மேலும், இந்தத் தனித்துவமான திருவிழாவிற்கு, டெல்லி மற்றும் அதன் துடிப்பான கலாச்சாரத்தை அனுபவிக்க இந்திய மற்றும் உலக நாடுகளில் இருக்கும் மக்களுக்குச் சிறந்த வாய்ப்பாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால்
இந்த 30 நாள் டெல்லி ஷாப்பிங் திருவிழா-வில் மக்களுக்குச் சிறப்பான ரீடைல் ஷாப்பிங்-ன் உயர்தர அனுபவத்தை அளிக்கப்படும். அனைத்து கடைகளிலும் அதிகப்படியான தள்ளுபடி அளிக்கப்படும், மொத்த டெல்லியும் அலங்கரிக்கப்படும். இதனுடன் எக்ஸிபிஷன்-ம் நடத்தப்பட உள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
இந்த 30 நாள் ஷாப்பிங் திருவிழா மூலம் டெல்லி மாநிலத்தின் வர்த்தகம் மேம்படுவதுடன் புதிய வர்த்தக வாய்ப்புகளை உருவாக்க வழிகள் பிறக்கும். அனைத்திற்கும் மேலாக மாநிலத்தின் பொருளாதாரம் பெரிய அளவில் மேம்படும்.
மேலும் டெல்லியில் இருக்கும் வியாபாரிகள், தொழிலதிபர்களுக்கு இந்த 30 நாள் ஷாப்பிங் திருவிழா மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும், இதேபோல் டெல்லி வியாபாரிகளின் தயாரிப்பை இந்தியா முழுவதும் கொண்டு செல்ல வாய்ப்பை உருவாக்கும் என்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.