கர்நாடகாவை சேர்ந்த சினி ஷெட்டி 2022-ம் ஆண்டுக்கான பெமினா மிஸ் இந்தியா போட்டியில் வெற்றி பெற்றார்.
கர்நாடகாவை சேர்ந்த 21 வயது இளம்பெண் சினி ஷெட்டி. மும்பையில் பிறந்த இவர் தற்போது கர்நாடகாவில் வாழ்கிறார். பட்டப்படிப்பு முடித்த சினி ஷெட்டி பரத நாட்டிய கலையிலும் தேர்ச்சி பெற்றுள்ளார். இந்நிலையில் பெமினா இதழ் நடத்தும் அழகி போட்டியில் கலந்து கொண்டார். இப்போட்டியின் இறுதிச் சுற்று மும்பையில் நடைபெற்றது.
இதில் முதல் இடத்தை சினி ஷெட்டி தட்டி சென்றார். அவரை தொடர்ந்து இரண்டாவது மூன்றாவது இடத்தை ராஜஸ்தானைச் சேர்ந்த ரூபல் ஷெகாவாத் மற்றும் உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த ஷினதா சவுஹான் தேர்வு செய்யப்பட்டனர்.சினி ஷெட்டி உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொள்வார்.
2022-ம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா மகுடத்தை சூடிய சினி ஷெட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் 'இந்தப் பயணத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த ஒவ்வொருவருக்கும் நன்றி'யை தெரிவித்துள்ளார்.