குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் திடீரென புதிய தொற்று நோயால் 9 பேர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோணா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு வரும் இந்நிலையில் புதிய நோய் ஒன்று உருவானது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இந்த நோயின் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள. குறிப்பாக முதன் முதலில் அகமதாபாத் மருத்துவமனையில் 44 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மூக்கை தாக்கி கண்களை பாதிக்கக்கூடியதாக இந்த நோயால், பார்வையற்றுப் போகவும், மூளையின் நரம்பு மண்டலம் செயலிழக்கவும் வாய்ப்புள்ளதாகவும், தாமதமான சிகிச்சை உயிருக்கு ஆபத்தாக முடியக்கூடும் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்