• vilasalnews@gmail.com

இந்தியா யாருக்கு சொந்தம்? ஓவைசி கூறுவது இதுதான்!

  • Share on

இந்தியா யாருக்காவது சொந்தமென்றால் அது திராவிடர்களுக்கும் , ஆதிவாசிகளுக்கும் தான் என ஓவைசி தெரிவித்துள்ளார்.

மராட்டிய மாநிலம் பாய்வாடியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அனைத்து இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் (எஐஎம்ஐஎம்) கட்சி தலைவரும், ஐதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி பங்கேற்றார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய ஓவைசி, இந்தியா எனக்கோ, தாக்கரேக்களுக்கோ, மோடி-ஷாக்களுக்கோ சொந்தமில்லை. இந்தியா யாருக்கேனும் சொந்தமென்றால் அது திராவிடர்களுக்கும், ஆதிவாசிகளுக்கும் தான். பாஜக - ஆர்எஸ்எஸ் முகலாயர்களுக்கு பின்னர் வந்தவை. ஆப்ரிக்கா, ஈரான், மத்திய ஆசியா, கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து வந்த பின்னரே இந்தியா உருவானது' என்றார். 

  • Share on

"முல்லை பெரியாற்றில் புதிய அணை" - கேரள ஆளுநர் பேச்சால் பரபரப்பு!

உதய்பூர் கொலை சம்பவம்: கொலையாளிகள் மீது கோர்ட் வளாகத்தில் சரமாரி தாக்குதல்!

  • Share on