டெம்போ வேனை வைத்து விபத்து ஏற்படுத்தி செய்தியாளரை கொலை செய்ததாக கேரள பத்திரிகையாளர் சங்கங்கள் குற்றசாட்டு
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பல்சேறு சேனல்களில் செய்தியாளராக பணியாற்றியவர் பிரதீப் (45). ஸ்ரீஜா என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். தற்போது இணையதள சேனல் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
நேற்று பணி முடிந்து இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்த போது திருவனந்தபுரம் - நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலை நேமம் என்ற இடத்தில் டெம்போ ஒன்று அவர் மோதியதில் தூக்கி வீசப்பட்ட பிரதீப் சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னர் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
பின் அந்த பகுதியில் ஒரு கடையில் கண்காணிப்பு கேமரா பொறுத்தப்பட்டிருந்தது.
அதனை கண்டு போலீசார் ஆய்வு மேற்கொண்ட போது டெம்போ வேன் செய்தியாளரை பின்தொடர்ந்தது சென்று மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி செல்வது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தன. விபத்தை ஏற்படுத்திய வேன், இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. வாகனத்தின் பதிவு எண்ணும் தெரியவில்லை.
கேரள அரசுக்கு எதிராக தொடர்ந்து செய்திகளை பிரதீப் வெளியிட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால், பல முறை கொலை மிரட்டல் வந்ததாகவும் பிரதீப்பின் தாயார் கூறியுள்ளார்.
எனவே, பிரதீப்பை திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. உடனடியாக , டெம்போ ஓட்டுநரை கைது செய்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் எனவும் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகள் மற்றும் கேரள மாநில பத்திரிகையாளர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் தலைமையில் செய்தியாளர் பலி குறித்து விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.