ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தானைச் சேர்ந்த, பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.
பூஞ்ச் மாவட்டத்தில் துர்கன் போஷாணா பகுதியில், லஷ்கர் இ தொய்பாவைச் சேர்ந்த பயங்கரவாத கும்பல் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது இருவர் பதுங்கியிருப்பதை கண்ட பாதுகாப்பு படையினர் பயங்கரவதிகளை சுட்டுக் கொன்றனர். மேலும், ஒருவனை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து, ஏ.கே. 47 உட்பட 3 துப்பாக்கிகள் மற்றும் சேட்டிலைட் போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.