இந்தியாவில் முதன் முறையாக, தேசிய சாலைப் போக்குவரத்து பாதுகாப்பு ஆலோசனை ஆணையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.
சாலை பாதுகாப்பு குறித்து மக்களிடையே கூடுதல் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த ஆணையம் உதவிகரமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து துறை நிபுணர்கள் மற்றும் சாலை பாதுகாப்பு நிபுணர்கள் இந்த ஆணையத்தில் இடம் பெற போவதாக தெரிவித்துள்ளனர்.
சாலை மற்றும் வாகன போக்குவரத்து பாதுகாப்பு, வாகனப்பதிவு முறைகள் உள்ளிட்டவை குறித்து மத்திய அரசுக்கு அவர்கள் ஆலோசனை கூறுவார்கள் என கூறப்படுகிறது.
உலகின் மொத்த சாலை விபத்துக்களில் 11 சதவிகிதம் இந்தியாவில் நடக்கிறது. இதனால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.14 சதவிகித இழப்பு ஏற்படுவதால் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.