கேரள சட்டப்பேரவை கூட்டத்தொடரின் தொடக்க உரையில் பேசிய மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான், ``முல்லை பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்டப்படுவது குறித்து தமிழக அரசுடன் ஆலோசனை நடத்தப்படும்" என தெரிவித்துள்ளார்.
மேலும், இதுகுறித்து பேசிய அவர், ``தமிழகத்திற்கு நீர் வழங்குவதில் கேரள அரசுக்கு எந்த பிரச்னையும் இல்லை, அதேசமயம் முல்லை பெரியாற்றின் நீர் மட்டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்தக்கூடாது என்பதில் கேரள அரசு திட்டவட்டமாக உள்ளது. கேரள மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவே, முல்லை பெரியாற்றில் புதிய அணை கட்டப்படும்" என பேசியுள்ளார்.
முல்லை பெரியாறு அணையில் நீர் தேக்குவது குறித்து தமிழக- கேரள அரசுக்கு இடையில் பிரச்சினை இருந்து வரும் நிலையில், கேரள மாநில ஆளுநர் உரையில் இவை இடம் பெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.