நாடாளுமன்ற புதிய கட்டிடத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் அடிக்கல் நாட்ட உள்ளார் என மக்களவைத் தலைவர் ஓம் பிரகாஷ் பிர்லா கூறி உள்ளார்.
புதிய நாடாளுமன்ற கட்டிடம் ரூ.861.9 கோடி செலவில் 64,500 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது. ஒவ்வொரு எம்பிகளுக்கும் தனித்தனி அலுவலகம் என பல்வேறு வசதிகள் இடம் பெற்று இடம் பெற்று உள்ளன.
'சென்ட்ரல் விஸ்டா' திட்டத்தின் அடிப்படையில் புதிய நாடாளுமன்ற கட்டிடம், மத்திய தலைமைச் செயலகம் கட்டப்பட உள்ளன. தற்போதைய கட்டிடத்தின் அருகே புதிய நாடாளுமன்ற கட்டிடம் முக்கோண வடிவில் அமைக்கப்படும். இந்த கட்டிடம் ஓராண்டில் கட்டி முடிக்கப்படும்
புதிய கட்டிடம் ரூ.861.9 கோடி செலவில் அமைக்கபடுகிறது. இதன் பரப்பளவு உத்தேசமாக 64,500 சதுர மீட்டராக இருக்கும் என தெரிகிறது. டாடா புராஜக்ட்ஸ் நிறுவனம் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள உள்ளது.
இந்த நிலையில், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா செய்தியாளர்களிடம் கூறுகையில்
'புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா வரும் 10-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்ட இருக்கிறார். இந்த மாதத்தில் புதிய நாடாளுமன்ற கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும்,
தற்போதைய நாடாளுமன்ற கட்டிடத்தில் மக்களவை 543 உறுப்பினர்கள் அமரும் வகையில் கொண்டது. ஆனால் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் 888 உறுப்பினர்களுக்கு அமரக்கூடிய திறன் இருக்கும், மாநிலங்களவை அறையில் தற்போதைய கட்டிடத்தில் 245 உறுப்பினர்கள் அமரும் நிலையில், புதிய கட்டிடத்தில் 384 பேருக்கு இடமளிக்க முடியும். மக்களவை அறைக்கான அதிகபட்ச கொள்ளளவு 1272 இடங்களாக இருக்கும் என்றார்.
மேலும், ஒரு மாபெரும் அரங்கு, உறுப்பினர்களுக்கான வளாகம், நூலகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இடம் பெற உள்ளன. அனைத்து எம்.பி.களுக்கும் தனித்தனி அலுவலகங்கள் கட்டப்பட உள்ளன என தெரிவித்தார்.