இந்தியாவில் தற்போது கருத்தியல் யுத்தம் மிகவும் தீவிரம் அடைந்திருப்பதாக பாஜக தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.
நான்கு நாள் உத்தரகாண்ட் சுற்றுப்பயணத்தை நேற்று தொடங்கிய நட்டா, டேராடூனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசினார்.
அப்போது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு வளர்ச்சி மற்றும் தேசிய வாதத்தை முன்வைப்பதாகவும் எதிர்க்கட்சியினரின் சுயநலமான செயல்பாட்டை மக்கள் நிராகரித்து விட்டதாகவும் கூறினார். கட்சி நிர்வாகிகளை சந்தித்துப் பேசவும் ஜே.பி.நட்டா திட்டமிட்டுள்ளார்