பிரபல மல்யுத்த வீரரான கிரேட் காளி பாஜகவில் இன்று இணைந்தார்.
WWE-மல்யுத்த போட்டிகளில் இந்தியா சார்பில் கலந்துகொண்டு பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியவர் ’தி கிரேட் காளி’ எனப்படும் தலிப் சிங் ராணா.
ஹிமாச்சலில் பிறந்தவரான இவர் தன்னுடைய அதீத உடல் வளர்ச்சியால் மல்யுத்தப் போட்டிகளில் பங்கேற்றதுடன் சில திரைப்படங்களிலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இன்று தில்லியில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் அக்கட்சியில் இணைந்தார்.