தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத் மாநகராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் அந்த மாநிலத்தை ஆளும் டிஆர்எஸ் கட்சியை பின்னுக்கு தள்ளி பாஜக முன்னிலை பெற்றுள்ளது.
ஹைதராபாத் மாநகராட்சிக்கு அண்மையில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று பலத்த பாதுகாப்புடன் 30 மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன.
இதில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாஜக 85க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது. தெலுங்கானாவை ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி சுமார் 37 இடங்களில் மட்டும் வகிக்கிறது. அசாதுதீன் ஒவைசியின் மஜ்லீஸ் இ கட்சி 17 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.