மகாராஷ்டிராவை சேர்ந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஒருவர், சர்வதேச அளவில் சிறந்த ஆசிரியராக தேர்வு செய்யப்பட்டு 7 கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஞ்சித் சின் திசாலே எனும் அந்த ஆசிரியர், பெண் கல்வி, க்யூஆர் கோட் குறியிடப்பட்ட புத்தகங்களின் பயன்பாடு போன்றவற்றை அதிகரிப்பதற்காக, மேற்கொண்ட முயற்சிகளை பாராட்டி, வர்கி எனும் அறக்கட்டளை இந்த பரிசை வழங்குகிறது.
இதனிடையே, போட்டியில் தோல்வியடைந்த சக போட்டியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், பரிசுத் தொகையில் பாதியை அவர்களுக்கு வழங்க உள்ளதாக ரஞ்சித் சின் திசாலே தெரிவித்துள்ளார்.