• vilasalnews@gmail.com

வாக்காளர்களுக்கு இலவசங்களை அறிவிப்பது தேர்தலின் நேர்மையை பாதிக்கும்- உச்சநீதிமன்றம்!!

  • Share on

தேர்தல் வந்தாலே அதை தருகிறோம் இதை தருகிறோம் என ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் போட்டி போட்டு அறிவிக்கிறது. ஆனால் அவை அணைத்தும் மக்கள் வரிபணத்தில் இருந்தே வழங்கப்படுகிறது. மக்களும் இலவசம் என ஆர்வத்தோடு வாங்கிக்கொள்கின்றனர். இந்த முறை மாறவேண்டும் என பலரும் கூறி வருகின்றனர். 

இந்த நிலையில், மக்கள் வரிப்பணத்தில் இருந்து இலவசங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்வதற்கு, தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என இரண்டு நாட்களுக்கு முன் என பா.ஜ.க.வை சேர்ந்த அஸ்வினி உபாத்யாய என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

மேலும், இலவசங்களை அறிவிப்பது அரசியல் கட்சிகள் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வாக்காளா்களுக்கு லஞ்சம் கொடுப்பது போன்ற செயலாகும். ஜனநாயக நடைமுறைகளை பாதுகாக்க இதுபோன்ற நடைமுறைகள் தவிா்க்கப்பட வேண்டும் என்று அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் அந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதிகள், அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் வாக்குறுதிகளில் மக்களுக்கு இலவசங்களை அறிவிப்பது தேர்தலின் நேர்மையை பாதிக்கும் தீவிரமான பிரச்னை. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

  • Share on

தமிழ் பெருங்குடி மக்களின் பேராதரவுடன் 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதில் பெரும்மகிழ்ச்சி!

பாஜகவில் இணைந்தார் பிரபல மல்யுத்த வீரர் கிரேட் காளி

  • Share on