• vilasalnews@gmail.com

விவசாயிகளுக்கு துரோகம்: பத்ம விபூஷண் விருது வேண்டாம்; பஞ்சாப் முன்னாள் முதல் அமைச்சர் முடிவு

  • Share on

விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம் இழைத்து விட்டது என கூறி பஞ்சாப் முன்னாள் முதல் அமைச்சர் பத்ம விபூஷண் விருதினை அரசுக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளார்.

வேளாண் மக்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும் நோக்கில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட 3 வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகளில் ஒரு தரப்பினரிடையே எதிர்ப்பு வலுத்தது.

இதனை தொடர்ந்து இந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை வாபஸ் பெற வலியுறுத்தியும் விவசாயிகள் சார்பில் டெல்லி சலோ (டெல்லி நோக்கி பேரணியாக செல்லுதல்) போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவானது.

இதன்படி, அரியானா, பஞ்சாப், கேரளா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த

விவசாயிகள் பேரணியில் கலந்து கொண்டுள்ளனர்.  தொடர்ந்து 8வது நாளாக இந்த போராட்டம் இன்றும் நீடித்து வருகிறது.

இதற்கு சுமூக தீர்வு காணப்படும் வகையில், மத்திய வேளாண் அமைச்சர் என்.எஸ். தோமர் தலைமையில் கடந்த இரு தினங்களுக்கு முன் மத்திய அரசு சார்பிலான பேச்சுவார்த்தை நடந்தது.  அதில் உடன்பாடு எட்டப்படவில்லை.  தொடர்ந்து போராட்டம் நீடித்தது.

இதனை தொடர்ந்து விவசாய சங்க தலைவர்களை இன்று சந்திப்பதற்கு முடிவானது.  இதன்படி, 35க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்க அழைப்பு விடப்பட்டு உள்ளது.

இதன் தொடர்ச்சியாக விவசாய தலைவர்களுடனான பேச்சுவார்த்தை கூட்டம் டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று தொடங்கி நடந்து வருகிறது.  இதில், மத்திய ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்ட மத்திய அரசு பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

கூட்டத்திற்கு செல்வதற்கு முன் இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மந்திரி தோமர், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படும் என நம்புகிறேன் என்று கூறி சென்றுள்ளார்.

இந்த நிலையில், பஞ்சாப் முன்னாள் முதல் அமைச்சர் பிரகாஷ் சிங் பாதல் தனக்கு வழங்கியிருந்த பத்ம விபூஷண் விருதினை அரசுக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளார்.  விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம் இழைத்து விட்டது என கூறிய அவர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விருது தனக்கு வேண்டாம் என கூறியுள்ளார்.

கடந்த 2015ம் ஆண்டு மார்ச்சில் பாதலுக்கு நாட்டின் மிக உயரிய பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. 

  • Share on

நவம்பர் மாதத்தில் தமிழக ஜிஎஸ்டி 10 சதவீதம் அதிகரிப்பு- மத்திய அரசு

தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஒருவர் சர்வதேச அளவில் சிறந்த ஆசிரியராக தேர்வு

  • Share on