• vilasalnews@gmail.com

மாட்டு வண்டி பந்தயம்: சுப்ரீம் கோர்ட் அனுமதி

  • Share on

மஹாராஷ்டிராவில் மாட்டு வண்டி பந்தயம் நடத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்., தேசியவாத காங்., கூட்டணி அரசு அமைந்துள்ளது.

மாநிலத்தில் மாட்டு வண்டி பந்தயம் நடத்துவதற்கு 2017ல் தடை விதிக்கப்பட்டது.இதையடுத்து பந்தயத்தை நடத்தும் வகையில் மாநில அரசு சட்ட விதிகளை உருவாக்கியது. ஆனால் தடையை நீக்க மும்பை உயர் நீதிமன்றம் மறுத்தது.இதை எதிர்த்து மஹாராஷ்டிரா அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்கை நீதிபதி ஏ.எம். கன்வில்கர் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்து வந்தது.

இந்நிலையில் அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

மாடு உள்ளிட்ட விலங்குகள் வதை செய்வதை தடுக்கும் வகையில் 1960ல் சட்டம் இயற்றப்பட்டது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு என்ற பெயரில் காளைகளை பிடிக்கும் போட்டி நடத்தப்படுகிறது. அது வீர விளையாட்டு என்பதால் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் சில திருத்தங்கள் செய்யப்பட்டன.

மேலும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி அளிக்கும் வகையில் மாநில அரசு சார்பில் புதிய விதிமுறைகள் அடங்கிய சட்டம் உருவாக்கப்பட்டது.இதுபோலவே கர்நாடகாவிலும் எருது விடும் போட்டி நடத்துவதற்காக தனி சட்டம் இயற்றப்பட்டது.இந்த இரண்டு மாநில சட்டங்களை எதிர்க்கும் வழக்கை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரிக்கிறது. அதே நேரத்தில் இந்த சட்டங்கள் தொடர்பாக எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.

அது போன்ற ஒரு வாய்ப்பு மஹாராஷ்டிராவுக்கும் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதன்படி மாட்டு வண்டி பந்தயம் நடத்துவதற்கு தடை விதிக்கும் இடைக்கால உத்தரவு நீக்கப்படுகிறது. இந்த வழக்கையும் தமிழகம், கர்நாடகா தொடர்பான வழக்குகளுடன் இணைத்து அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும்.இவ்வாறு அமர்வு உத்தரவிட்டுள்ளது.

  • Share on

21 ஆண்டுகளுக்கு பிறகு ‘பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற’ இந்திய பெண்...!

தமிழ் பெருங்குடி மக்களின் பேராதரவுடன் 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதில் பெரும்மகிழ்ச்சி!

  • Share on