தமிழகத்தில் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, நவம்பர் மாதத்தில் மட்டும் ஏழாயிரத்து 84 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது.
மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் கடந்த ஆண்டு ஆறாயிரத்து 449 கோடி ரூபாய் வசூலான நிலையில், தற்போது ஜிஎஸ்டி வரி வருவாய் 10 சதவிகிதம் அளவிற்கு அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேசமயம், மகாராஷ்டிரா, கர்நாடகா, டெல்லி போன்ற மாநிலங்கள் வரி வசூலில் வீழ்ச்சியை கண்டுள்ளன.