• vilasalnews@gmail.com

கணவனுக்கு கோவில் கட்டி வழிபடும் பாசக்கார மனைவி!

  • Share on

பெண் ஒருவர் தன் கணவருக்கு கோயில் கட்டி அவரது உருவச் சிலைக்கு பூஜை செய்து வழிபட்டு வரும் செயல் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.

அங்கி ரெட்டி – பத்மாவதி தம்பதி பத்மாவதி தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். சந்தோசமாக போய்க் கொண்டிருந்த இவர்களின் குடும்ப வாழ்க்கையில் திடீரென அந்த அதிர்வு ஏற்பட்டது. விபத்து ஒன்றில் அங்கி ரெட்டி உயிரிழந்துவிட்டார். இதன் பின்னர் அவரின் நினைவாகவே வாழ்ந்து வந்திருக்கிறார் பத்மாவதி. நான்கு வருடங்களுக்கு முன்பு கணவரை இழந்து விட்டாலும் இன்னமும் அதே நினைவுடன் வாழ்ந்து வந்திருக்கிறார் பத்மாவதி.

சமீபத்தில் இவரது கனவில் வந்த அங்கிரெட்டி, தனக்கு கோயில் கட்டி வழிபடுமாறு கேட்டிருக்கிறாராம். இதனால் பத்மாவதி, கணவருக்கு கோயில் கட்டி வழிபட முடிவு செய்திருக்கிறார். அதன்படியே கணவருக்கு கோயில் கட்டி கோயிலின் உள்ளே அவரது உருவச் சிலையை வைத்து பூஜைகள் செய்து வழிபட்டு வருகிறார். இந்தக் கோவிலை கட்டுவதற்கு பத்மாவதியின் மகனும் தெரிந்த நண்பரும் பண உதவி செய்ததாக அவர் தெரிவித்திருக்கிறார்.

தனது கணவரின் பிறந்த நாள், நினைவு நாள் மற்றும் பவுர்ணமி ஆகிய தினங்களில் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கி வருகிறார் பத்மாவதி.

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கழுத்தை நெரித்தும், விஷம் வைத்தும், முகத்தில் தலையணையை வைத்து அழுத்தியும், புதைத்தும் எரித்தும் விடுகின்ற மனைவிகளின் அதிர்ச்சி செயல்கள் தொடர்ந்து வெளிவரும் நிலையில், பத்மாவதியின் இந்த செயல் எல்லோரையும் நெகிழ வைத்திருக்கிறது.

  • Share on

வாட்ஸ்அப் செயலியை விட பாதுகாப்பான அம்சங்களுடன் Sandes ஆப் அறிமுகம்.!

21 ஆண்டுகளுக்கு பிறகு ‘பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற’ இந்திய பெண்...!

  • Share on