• vilasalnews@gmail.com

சீன பொருட்களை புறக்கணித்ததால், தீபாவளி வர்த்தகத்தில் சீனாவுக்கு ரூ.40,000 கோடி இழப்பு

  • Share on

சீன பொருட்களை புறக்கணித்ததால், தீபாவளி வர்த்தகத்தில் சீனாவுக்கு ரூ.40,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நாட்டின் முக்கிய நகரங்களில் தீபாவளி பண்டிகை காலத்தில் மட்டும் 72 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றுள்து.

அதே சமயம் சீன பொருட்களை வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் புறக்கணித்ததால் சீனாவுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் என்ற அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கால்வன் தாக்குதலை தொடர்ந்து சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற எண்ணம் பொதுமக்களிடம் ஏற்பட்டது. அதை பொதுமக்கள் தங்கள் வலைத்தளங்கள் வாயிலாக தொடர்ந்து பகிர்ந்தனர். இதன் தாக்கம் தீபாவளி பண்டிகை காலத்தில் எதிரொலித்துள்ளது.

  • Share on

தொடர்ந்து நான்காவது முறையாக பீகார் முதல்வரானார் நிதிஷ் குமார்

ஒடிசாவில் 4 நாட்களில் இரண்டாவது முறையாக ஏவுகணை சோதனை

  • Share on