வாட்ஸ்அப் செயலிக்கு போட்டியாக பல்வேறு புதிய செயலிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. சமீபத்தில் மத்திய அரசு Sandes எனும் செயலியை அறிமுகம் செய்தது. மேலும் இந்த புதிய சாண்டஸ் (Sandes) செயலி ஆனது கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் கிடைக்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தேசிய தகவல் மையம் வாட்ஸ்அப் வரிசையில் இந்த Sandes செயலியை கொண்டுவந்தது. மேலும் வாட்ஸ்அப் போலவே இந்த புதிய என்ஐசி தளத்தை மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் ஐடி உள்ள எவரும் பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.
பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியை விட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த Sandes செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் Sandes செயலி மிகவும் பாதுகாப்பான வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, அதாவது இது கிளவுட்-இயக்கப்பட்ட தளமாகும்.
அதேபோல் Sandes செயலியில் பதிவுபெற மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் ஐடி தேவைப்படும். நீங்கள் இந்த செயலியில் பதிவு செய்தவுடன், மெசேஜ்களை அனுப்பலாம் மற்றும் பெறலாம். மேலும் புதிய க்ரூப்களையும் உருவாக்கலாம் மற்றும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் போன்ற மல்டிமீடியா உள்ளடக்கத்தையும் பகிரலாம் என்று கூறப்படுகிறது. மேலும் ஆடியோ-வீடியோ அழைப்புகள்என பல்வேறு அசத்தலான அம்சங்களும் இந்த செயலியில் உள்ளன .
குறிப்பாக வாட்ஸ்அப் மற்றும் பிற முக்கிய உடனடி மெசேஜிங் ஆப்களைப் போலவே, சாண்ட்ஸ் ஆப் ஆனது எண்ட் டூ எண்ட் என்க்ரிப்ஷனை (அதாவது மறைகுறியாக்கப்பட்ட தகவல் தொடர்புகளை) பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. அதேபோல் சாண்டஸ் செயலியை அரசாங்க அதிகாரிகள் மற்றும் தனிப்பட்ட பயனர்கள் என இருவருமே பயன்படுத்தலாம் எனத் தகவல் வெளிவந்துள்ளது.
தற்போது சாண்டஸ் செயலி ஆனது என்ஐசி மின்னஞ்சல், டிஜிலாக்கர் மற்றும் இ-அலுவலகத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. விரைவில் வாட்ஸ்அப்-ஐ விட பல்வேறு முக்கியமான அம்சங்கள் இந்த சாண்டஸ் செயலியில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வாட்ஸ்அப் செயலியை போலவே, மெசேஜ்களை அனுப்புவதற்கும், பெறுவதற்கும் அல்லது தொடர்புகளுக்கு இடையில் படங்களை வீடியோக்களையும் பகிர இந்த சாண்டஸ் ஆப் பயன்பாட்டை பயன்படுத்தலாம். அதேபோல் இந்த செயலி காண்டாக்ட் ஷேரிங் மற்றும் க்ரூப் சாட்களையும்அனுமதிப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல் சாண்டஸ் ஆப் பயன்பாட்டின் முழு அம்சங்களும் அரசாங்கத்தால் சரிபார்க்கப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்று தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த சாண்டஸ் ஆப் பயன்பாடு.