தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றார்.
பிரதமர் மோடி தலைமையில் விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய அமைச்சரவை இன்று மாலை பதவியேற்றது. புதிய அமைச்சர்களுக்கு குடியரசு தலைவர் ராஜ்நாத்கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
பிரதமர் மோடி தலைமையிலான விரிவாக்கம் செய்யப்பட்ட அமைச்சரவையில் மொத்தம் 43 பேர் இடம்பெற்றுள்ளனர். அவர்களில் 14 பேர் 50 வயதுக்கும் குறைவானவர்களாவர்.
மத்திய அமைச்சராக பதவி ஏற்றார் எல்.முருகன்
மீனாட்சி லேகி, அன்னபூர்ணா தேவி, நாராயணசாமி, கவுசல் கிஷோர், அஜய் பட், நாராயண் ரானே, சோனாவால், வீரேந்திரகுமார், ஜோதிராதித்ய சிந்தியா, கிஷன்ரெட்டி, ராஜ்குமார் சிங், ஹர்தீப் சிங் புரி, மன்சுக் மாண்டவியா, பூபேந்தர் பர்ஷோத்தம் ரூபாலா, ராஜீவ் சந்திர சேகர், ஷோபா, பானு பிரதாப் சிங் வர்மா, தர்ஷனாவிக்ரம் ஜார்தோக், ராம்சசந்திர பிரசாத் சிங், அஸ்வினி வைஷ்ணவ், கிரண் ரிஜிஜூ, பசுபதி குமார் பாரஸ், அனுராக் தாக்கூர், பங்கஜ் சவுத்ரி, அனுப்ரியா சிங், படேல் சத்யபால்சிங் பாஹேல் ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் மத்திய அமைச்சராக பதவி ஏற்பதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.