இந்தியாவில் “லஞ்சம்” கொடுத்தால் மட்டுமே பொதுசேவைகளை பெற முடியும் ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
கரப்ஷன் வாட்ச்டாக் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற ஊழல் கண்காணிப்பு அமைப்பு நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. இந்த ஆண்டு ஜூன் 17 முதல் ஜூலை 17 வரை இந்தியர்கள் 2,000 பேரிடம் நடத்திய ஆய்வில் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
அதில் 50 சதவீதம் பேர், அதிகாரிகளின் வற்புறுத்தலின் பேரில் லஞ்சம் கொடுக்கப்பதாகவும், 32 சதவீதம் பேர் சேவையைப் பெற லஞ்சம் கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என கூறியுள்ளனர்.
மேலும் இந்தியாவில் மக்களுக்கான பொதுசேவைகளை பெற 46 சதவீதம் பேர் தனிப்பட்ட தொடர்புகளைஅணுகி பயன் பெறுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. லஞ்சத்தைத் தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முயற்சி எடுத்தும் எந்த பயனும் இல்லை என்றும் அரசு-பொதுமக்கள் இடையே சுமூகமான உறவு ஏற்பட வழிவகை செய்ய வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்திருந்தார்கள்.
கிட்டத்தட்ட 17 நாடுகளில் 20,000 குடிமக்களிடயே உலகளாவிய ஊழல் காற்றழுத்தமானி (ஜி.சி.பி) நட்த்திய இந்த ஆய்வில், நான்கு பேரில் மூன்று பேர் தங்கள் நாட்டில் ஊழல் பெரிய பிரச்சினையாக உள்ளது என தெரிவித்து இருக்கின்றனர்.
ஊழல் மற்றும் லஞ்சம் தொடர்பான தினசரி அனுபவம் ஆபத்தானதாக உள்ளது என அந்த அறிக்கையின் முடிவில் வந்துள்ளது, கிட்டத்தட்ட ஐந்து குடிமக்களில் ஒருவர் சுகாதார அல்லது கல்வி போன்ற, முக்கிய அரசு சேவைகளை அணுக லஞ்சம் கொடுக்கிறார்.
கணக்கெடுக்கப்பட்ட 17 நாடுகளில் இந்தியாவுக்குப் பிறகு அதிக லஞ்சம் பெறும் நாடுகளின் பட்டியலில் கம்போடியா 37 சதவீதம் பேர் சேவையைப் பெற லஞ்சம் கொடுப்பதாகவும், இந்தோனேசியாவில் 30 சதவீதம் பெற் லஞ்சம் கொடுப்பதாகவும் ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் குறைவாக லஞ்சம் பெறும் நாடுகளாக ஜப்பான், மாலத்தீவு ஆகியவை இடம் பெற்றுள்ளன.