• vilasalnews@gmail.com

கொரோனா காரணமாக பல கோடி ரூபாய் இழப்பை சந்தித்த தெற்கு ரயில்வே..

  • Share on

கொரோனோ காரணமாக தெற்கு ரயில்வே சுமார் 1799  கோடி ரூபாய் இழப்பீட்டை சந்தித்துள்ளது.

கொரோனா காரணமாக பல மாதங்கள் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தது.  தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்ததன. இதன் காரணமாக ரயில் பயணிகள் தங்கள் அவசரத் தேவைகளுக்கு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை பயன்படுத்திக்கொண்டனர்.

தமிழக அரசும் ரயில் பயணிகளுக்கு தளர்வுகள் அளித்து உத்தரவிட்டனர். ஆனாலும் தெற்கு ரயில்வேயில் இயக்கப்பட்ட ரயில்கள் பல்வேறு வழித்தடங்களில் 20 சதவீதத்திற்கு குறைவான பயணிகளுடன் இயக்கப்பட்டது. இதனால் அவ்வப்போது ரயில்கள் ரத்து செய்யப்படும் நிலை ஏற்பட்டது.

இதனால் தெற்கு ரயில்வேயில் டிக்கெட் வருவாய் பெருமளவில் குறைந்தது. குறிப்பாக 2019-20 ஆம் ஆண்டுகளில் 2014.52 கோடி வருவாய் பெற்றிருந்த நிலையில் இந்தாண்டு 476.83 கோடி ரூபாய் மட்டுமே பெற்றுள்ளது. இதனால் தெற்கு ரயில்வே சுமார் 1799  கோடி ரூபாய் இழப்பீட்டை சந்தித்துள்ளது.

இந்நிலையில், இழப்பீட்டால் தெற்கு ரயில்வேயில் செயல்படுத்தப்பட்டு வரும் நவீன மேம்பாட்டு வசதிகள் பார்க்கிங் வசதிகள் மற்றும் புதிய திட்டங்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு இல்லை என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏனென்றால் கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் புதிய திட்டங்களுக்கும் ரயில்வே மேம்பாட்டு பணிகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

எனவே தற்போது அதற்கு ரயில் சேவை பெறும் பயணிகளுக்கு எந்த இடையூறும் இருக்காது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேவேளையில் தற்போது ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பு அடுத்த ஆண்டு பட்ஜெட்டில் எதிரொலிக்குமா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

  • Share on

பிரதமர் மோடிக்கு மாம்பழங்களை பரிசாக அனுப்பிய மம்தா பானர்ஜி - காரணம் என்ன?

மத்திய அமைச்சராக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பதவி ஏற்றார்!

  • Share on