• vilasalnews@gmail.com

பிரதமர் மோடிக்கு மாம்பழங்களை பரிசாக அனுப்பிய மம்தா பானர்ஜி - காரணம் என்ன?

  • Share on

பிரதமர் மோடியுடன் எப்போதும் மோதல் போக்கை கடைப்பிடித்து வருபவர் மேற்குவங்க மாநில முதல்வரான மம்தா பானர்ஜி. அவர் பிரதமர் மோடிக்கு சிறப்பு பரிசாக மாம்பழங்களை அனுப்பி வைத்துள்ளது அரசியல் விமர்சகர்களால் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.

2011, 2016 என இரு முறை தொடர்ந்து மேற்குவங்கத்தின் முதல்வராக இருந்தவர் மம்தா பானர்ஜி, தற்போது நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலிலும் தொடர்ந்து 3வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொண்டுள்ளார் மம்தா பானர்ஜி.

ஏற்கனவே பிரதமர் மோடியுடனும், மத்திய அரசுடனும், மாநில ஆளுநருடனும் மோதல் போக்கை கடைப்பிடித்து வந்த மம்தா பானர்ஜி ஆட்சிக்கு வந்த பின்னர் தற்போதும் அதே நிலையிலேயே இருந்து வருகிறார். கடந்த மே மாத இறுதியில் யாஸ் புயல் பாதிப்புகளை பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி மேற்குவங்கம் வருகை தந்த போது, அவருடனான புயல் பாதிப்பு குறித்த ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் மம்தா புறக்கணித்துவிட்டு அறிக்கை ஒன்றை மட்டும் அவரிடம் கொடுத்துச் சென்றதுடன், அந்த கூட்டத்துக்காக பிரதமரை 30 நிமிடம் அவர் காக்க வைத்ததாக வெளியான தகவலும் அரசியல் அரங்கை அதிரச் செய்தன.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு மாம்பழங்களை சிறப்பு பரிசாக மம்தா பானர்ஜி அனுப்பி வைத்திருக்கிறார்.

மேற்குவங்கத்தின் சிறப்புவாய்ந்த Himsagar, Malda மற்றும் Lakshmanbhog மாம்பழ ரகங்களை அவர் பிரதமர் மோடிக்காக டெல்லிக்கு கடந்த வாரம் அனுப்பி வைத்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

மம்தா பானர்ஜி 2011ம் ஆண்டு முதல் முறையாக முதல்வராக பதவியேற்றது முதலே அவர் இந்த வழக்கத்தை கடைப்பிடித்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் அவர் மாம்பழங்களை பிரதமருக்கு அனுப்பியுள்ளார்.

பிரதமர் மோடி தவிர்த்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருக்கும் மாம்பழங்களை அனுப்பி வைத்திருக்கிறார் மம்தா பானர்ஜி.

முன்னதாக, மம்தா பானர்ஜி ஒவ்வொரு ஆண்டும் தனக்கு குர்தாக்களை பரிசளிப்பார், அவருடன் எனக்கு நல்ல உறவு இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்த போது, ஒவ்வொரு ஆண்டும் நான் எல்லோருக்குமே பரிசுகளை அனுப்பி வைப்பேன், அது மேற்குவங்கத்தில் கலாச்சாரம் என மம்தா தெரிவித்தார்.

  • Share on

அரசு மருத்துவமனைதான் சாதாரண மக்களின் கடைசி நம்பிக்கை.. தமிழிசை உருக்கம்...

கொரோனா காரணமாக பல கோடி ரூபாய் இழப்பை சந்தித்த தெற்கு ரயில்வே..

  • Share on