• vilasalnews@gmail.com

அரசு மருத்துவமனைதான் சாதாரண மக்களின் கடைசி நம்பிக்கை.. தமிழிசை உருக்கம்...

  • Share on

தேசிய மருத்துவர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில் கதிர்காமம் இந்திராகாந்தி மருத்துவ கல்லூி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் தேசிய மருத்துவர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக துணை நிலை ஆளுநர் டாக்டர். தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு கொரோனா பெருந்தோற்று சூழலில் சிறப்பாக பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு விருதுகளை வழங்கி பாராட்டினார்.

அப்போது  பேசிய  தமிழிசை, அடிப்படையில் நான் ஒரு மருத்துவராக இருப்பதால், மருத்துவர்களின் சிரமங்களை நான் நன்றாக புரிந்து வைத்திருக்கிறேன். மருத்துவராக இருப்பது உண்மையில் ஒரு சவாலான காரியம். சில நேரங்களில், நோயாளிகளின் உறவினர்கள் தங்களுக்கு அன்பானவர்களை இழக்க நேரிடும்போது அந்த கோபத்தை மருத்துவர்கள் மீது காட்டுகிறார்கள். இதுபோன்ற சூழ்நிலையில் மருத்துவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பது ஒரு நிர்வாகியாக -ஆளுநராக எனக்கு எப்போதும் இருக்கும்  அக்கறை.

கோவிட் பெருந்தொற்றுச் சூழலில் நாம் சுமார் ஆயிரக்கணக்கான மருத்துவர்களை இழந்துவிட்டோம். மருத்துவர்கள் தங்கள் நலனையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தங்கள் மீதும் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். மக்களுக்கு என்னுடைய வேண்டுகோள் நம் அனைவரின் உயிரைக் காப்பாற்றும் மருத்துவர்களை நாம் பாதுகாக்க வேண்டும் என்பதுதான்" என்றார்.

மேலும் கொரோனாவைக் கட்டுப்படுத்தியதற்குப் பின்னால் அவர்களுடைய தியாகம் இருக்கிறது. மருத்துவர்களின் குடும்பங்களிலும் சிலர் பாதிக்கப்பட்டிக்கலாம். நோயாளிகளையும் குடும்பத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கிறார்கள். சிலநேரங்களில் மருத்துவர்களின் தியாகங்கள் மறைக்கப்படுகிறது. “ஆயுஷ்மான் பாரத்“ என்ற மிகப்பெரிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்குக் கொண்டு வந்து மக்கள் சேவைக்காக அர்ப்பணித்தார் பாரதப் பிரதமர் மோடி, மருத்துவர்களை மிக உயர்ந்த நிலையில் வைத்திருக்கிறார்.  குஜராத்தில் இருந்தபோது “சஞ்சீவி திட்டம்“ என்று ஒரு திட்டத்தை கொண்டு வந்தார். அந்த திட்டத்தின் மூலம் யாரும் எந்த மருத்துவமனையிலும் சேர்ந்து சுகப்பிரசவம் பார்த்துக் கொள்ளலாம். அதற்கான கட்டணத்தை அரசு ஏற்றுக்கொள்ளும்.

மருத்துவர்கள் மற்றவர்களை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்துகின்றனர். அந்த நேரத்தில் மருத்துவர்கள் தங்களையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்திய அவர், பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் அரசாங்க மருத்துவமனைகள்தான் சாதாரண மக்களின் கடைசி நம்பிக்கை. அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுபவர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றும் துணைநிலை ஆளுநர் கூறினார். விழாவில் சுகாதாரத்துறை செயலர் அருண், இயக்குனர் மோகன்குமார், மருத்துவ கல்லூரி இயக்கனர் உதயகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

  • Share on

‘பள்ளி கட்டணம் கட்ட முடியலனா செத்துடுங்க’: பாஜக அமைச்சரின் சர்ச்சை பேச்சு!

பிரதமர் மோடிக்கு மாம்பழங்களை பரிசாக அனுப்பிய மம்தா பானர்ஜி - காரணம் என்ன?

  • Share on