• vilasalnews@gmail.com

‘பள்ளி கட்டணம் கட்ட முடியலனா செத்துடுங்க’: பாஜக அமைச்சரின் சர்ச்சை பேச்சு!

  • Share on

பள்ளி கட்டணம் கட்ட முடியவில்லை என்றால் செத்துப் போங்கள் என மாணவர்களின் பெற்றோர்களிடம்  மத்திய பிரதேச கல்வி அமைச்சர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

நாட்டில் கொரோனா 2வது அலை காரணமாக பெரும்பாலான பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு இணையம் வழியாக கல்வி பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.  கொரோனா காரணமாக பொருளாதாரம் பாதிக்கப்பட்டு மக்கள் அவதியடைந்துள்ளனர். இந்நிலையில், தங்கள் குழந்தைகளின் கல்வி கட்டணத்தை செலுத்த முடியாத அவல நிலையில் பெற்றோர்கள் உள்ளனர். கல்வி கட்டணங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம், உயிர் நீதிமன்றங்கள் போன்றவையும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளன. எனினும்,  பல்வேறு பள்ளிகளும் அதிக அளவில் கட்டணங்களை வசூலிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக கல்வி அமைச்சர் இந்தர் சிங் பர்மரை  அவரது இல்லத்துக்கு சென்று பெற்றோர்கள்  சங்கத்தின் பிரதிநிதிகள் சந்தித்துள்ளனர்.  அப்போது, பள்ளிகள் திறக்காத நிலையில், இவ்வளவு கட்டணம் வசூலித்தால் எப்படி செலுத்துவது என்று கவலை தெரிவித்த பெற்றோர்கள், “ நாங்கள் என்ன தான் செய்வது, செத்துபோய் விடவா’ என்று வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

அதற்கு அமைச்சர் இந்தர் சிங் பர்மரோ,  நீங்கள் விரும்பினால் செத்து போங்கள் என கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். அமைச்சரின் இந்த பேச்சு பெற்றோர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது.

இது குறித்து பெற்றோர்கள் சங்கத்தின் தலைவர் கமல் விஸ்வகர்மா கூறுகையில்,

  ‘ உயர் நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் மாநில அரசின் வழிகாட்டுதல்களுக்கு எதிராக தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகின்றன. இது குறித்து அமைச்சரிடன் புகார் அளிக்க 60 பேர் சென்றோம். அமைச்சருக்காக ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்தோம்.  ஆனால் அமைச்சரோ எங்களிடம் பேசாமல் நேராக தனது காரை நோக்கி சென்றார். நாங்கள் எங்களை நிலையை அவரிடம் கூறியபோது, இவ்வாறு  தெரிவித்தார்’ என்று குறிப்பிட்டார்.

அமைச்சரின் இந்த பேச்சு தொடர்பான வீடியோ வைரலாகியுள்ளது. தனது பொறுப்பற்ற பேச்சிற்காக அமைச்சர் பதவியிலிருந்து இந்தர் சிங் பர்மர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள காங்கிரஸ், அவர் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

  • Share on

இதற்கு மேல் என்றால் 15 ரூபாய் - நாளை முதல் அமல்!

அரசு மருத்துவமனைதான் சாதாரண மக்களின் கடைசி நம்பிக்கை.. தமிழிசை உருக்கம்...

  • Share on