• vilasalnews@gmail.com

டெல்டா பிளஸ் கொரோனாவால் மகாராஷ்டிராவில் பெண் உயிரிழப்பு

  • Share on

டெல்டா பிளஸ் வகை கொரோனாவால் மகாராஷ்டிராவில் 80 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நாட்டிலேயே அதிக டெல்டா பிளஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட மாநிலமாக, தற்போது மகாராஷ்டிராதான் உள்ளது. அங்கு இதுவரை 20 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், இணை நோய்களுடன் சிகிச்சை பெற்று வந்த மகாராஷ்ட்ராவின் ரத்னகிரி மாவட்டத்தை சேர்ந்த பெண்ணொருவர், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து மகாராஷ்டிரா அரசு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளது. இதுவே மகாராஷ்டிராவில் முதல் டெல்டா பிளஸ் உயிரிழப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னராக, மத்திய பிரதேசத்தில் ஒருவர் இப்பாதிப்பில் இறந்திருந்தார். இந்த நிலையில் மகாராஷ்டிராவில் மேலும் ஒரு பெண் இறந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Share on

முன்னாள் தலைமைச் செயலாளர் மீது மத்திய அரசு ஒழுங்கு நடவடிக்கை

இதற்கு மேல் என்றால் 15 ரூபாய் - நாளை முதல் அமல்!

  • Share on