இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக 7முறை தேர்ந்தெடுக்கப்பட்ட அகமது படேல் இன்று அதிகாலை உயிரிழந்தார்.
காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அகமது படேல் ஒரு மாத காலத்துக்கு முன்பு உண்டான கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தார்.
குர்கானில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அகமது படேல் (71) இன்று அதிகாலை 3.30 மணி அளவில் உயிரிழந்தார். இதை அவரது மகன் ஃபைசல் படேல் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
அகமது படேல் இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் பரூச் நகரத்தைச் சார்ந்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவர். 2001 முதல் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகராக உள்ளார். 2004 மற்றும் 2009 இந்தியப் பொதுத் தேர்தல்களில் காங்கிரசு கட்சியின் வெற்றிக்காகப் பாடுபபட்டவர்.
குஜராத் மாநிலத்திலிருந்து 7 முறை இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்ப்பட்டவர். அதில் மூன்று முறை மக்களவைக்கும் நான்கு முறை மாநிலங்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.