அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாண நீதிமன்றத்தின் நீதிபதியாக இந்திய வம்சாவளியான சரளா வித்யா நாகலாவை அதிபர் ஜோ பைடன் பரிந்துரைத்துள்ளார்.
ஜோ பைடன் அவரது நிர்வாகத்தில் இந்திய வம்சாவளிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பல முக்கிய பதவிகளில் நியமித்து வருகிறார். துணை அதிபர் கமலா ஹாரிஸ் உட்பட பலரும் இதில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.
கனெக்டிகட் மாகாண நீதிமன்றத்தின் நீதிபதியாக சரளா வித்யா நாகலாவை அதிபர் ஜோ பைடன் நேற்று முன்தினம் பரிந்துரைத்தார்.
வழக்கறிஞராக பணிபுரிந்து வரும் இவரை நீதிபதியாக்கும் பரிந்துரைக்கு செனட் சபை ஒப்புதல் அளிக்கவேண்டும். செனட் சபை ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் கனெக்டிகட் மாகாண நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றும் முதல் தெற்காசிய நபர் என்ற பெருமையை இவர் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.