திருப்பதியில் மூன்று இளைஞர்களை திருமணம் செய்துகொண்டு பணத்துடன் தப்பி ஓடிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்த சுனில்குமார் என்ற இளைஞருக்கு கடந்த வருடம் நிதிநிலை ஊழியர் எனக்கூறி சுஹாசினி என்ற பெண் அறிமுகம் ஆகியுள்ளார். இருவருக்கும் காதல் ஏற்பட்டு கடந்த டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர். அப்போது சுனில்குமார் பெற்றோர்
சுஹாசினிக்கு 20 கிராம் தங்க நகைகள் வாங்கிக் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது நெருங்கிய உறவினர் மருத்துவச் செலவுக்கு பணம் தேவைப் படுவதாக சுனில்குமார் இடமிருந்து ரூபாய் 4 லட்சமும் அவரது தந்தையிடம் 2 லட்சமும் பணம் வாங்கிக்கொண்டு சுஹாசினி மாயமாகி விட்டார்.
பின்னர் விசாரிக்கையில் சுஹாசினிக்கு ஏற்கனே நல்லூரைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. இதனிடையே சுனில்குமார் தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்ட சுஹாசினி தன்னைப்பற்றி காவல்நிலையத்தில் புகார் அளித்தால் விபரீதத்தை சந்திப்பீர்கள் என மிரட்டியுள்ளார்.
இதே போல வேறொருவருடன் திருமணம் ஆன புகைப்படத்தையும் சுனில்குமார் வாட்ஸ்அப் எனக்கு அனுப்பியுள்ளார். இதையடுத்து சுனில்குமார் அலிபிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து விசாரணை நடத்திவரும் காவல்துறையினர் சுஹாசினியை தேடி வருகின்றனர்.