சுவாசம் வழியாக செல்லும் தொற்றுக் கிருமிகள், பாக்டீரியாக்கள் போன்றவை தொண்டையை சென்றடைகிறது. அங்கிருந்து நுரையீரலுக்கு சென்று நுரையீரலில் பாதிப்பை உண்டாக்குகிறது. நுரையீரல் பஞ்சு போன்ற மென்மையான ஒரு பாகமாகும். அதில் தொற்று உண்டாகும் பொழுது சுவாசிப்பதில் பிரச்சினையும் ஏற்படுகிறது. இதற்காக ஆவி பிடித்தல் முறையை கையாளுவது சிறந்த பலன் தரும் விஷயமாக இருக்கும்.
அப்படி ஆவி பிடிக்கும் பொழுது பாரம்பரிய முறைப்படி நாம் என்னவெல்லாம் சேர்த்தால் நல்ல பலன் கிடைக்கும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.
காற்றின் மூலம் பரவக்கூடிய நுண்கிருமிகள் சுவாசிப்பதன் மூலம் நம் உடலை வந்தடைகிறது. அதன் பிறகு நமக்கு ஏற்படும் முதல் அறிகுறி தொண்டை அலர்ஜி. தொண்டையில் பிரச்சனைகள் ஆரம்பிக்கும் பொழுதே நாம் முதலில் எச்சரிக்கையாக இருந்து கொள்வது நல்லது. இந்த சமயத்தில் தினமும் இரண்டு முறை அல்லது மூன்று முறை ஆவி பிடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
சாதாரணமான தண்ணீரில் தைலத்தை சேர்த்து ஆவி பிடிப்பது எல்லோரும் செய்யும் இயல்பான ஒரு முறையாகும். ஒரு சிலர் கடைகளில் ஆவி பிடிக்கும் டியூபுகள் வாங்கி தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து அந்த தண்ணீரை ஆவி பிடிக்கவும் செய்வார்கள். இதையெல்லாம் விட நம் பாரம்பரிய முறைப்படி இயற்கையாகக் கிடைக்கும் இந்த அற்புத மூலிகை பொருட்களை சேர்த்து தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து ஆவி பிடித்தால் தொண்டையில் இருக்கும் கிருமிகள் அழிந்து நுரையீரல் தொற்று தடுக்கப்படும். தலையில் கோர்த்திருக்கும் நீர் வெளியேறி உடம்பை லேசாக உணர வைக்கும். சளி, ஜுரம் எதுவும் மாயமாகும். அதற்கு என்னென்ன பொருட்கள் தேவை? என்பதை பார்ப்போம்.
ஆவி பிடிக்க தேவையான மூலிகைகள்:
துளசி – 10
இலைகள் நொச்சி – 10
இலைகள் ஆடாதொடை – 10 இலைகள்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
இஞ்சி – ஒரு விரல் அளவிற்கு
கல்லுப்பு – ஒரு தேக்கரண்டி
வேப்பிலை – ஒரு கைப்பிடி அளவிற்கு
கிராம்பு – 2
ஆவி பிடிக்கும் முறை:
அடுப்பை பற்ற வைத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வையுங்கள். அதில் இஞ்சியை தோல் சீவி நன்கு உரலில் இட்டு இடித்து அதில் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு கைப்பிடி அளவிற்கு வேப்பிலைகளை சேர்த்துக் கொள்ளுங்கள். இவற்றுடன் ஆடாதொடை இலைகள், துளசி இலைகள், நொச்சி இலைகள் ஆகியவற்றையும் சேர்த்து காற்று வெளியே போகாதவாறு ஒரு 6 நிமிடங்கள் மூடி வைத்து விடுங்கள்.தண்ணீர் நன்கு கொதித்து வந்ததும் மூடியை திறந்து ஒரு தேக்கரண்டி அளவிற்கு உப்பு, 2 கிராம்பு, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து மீண்டும் மூடி 4 நிமிடம் வைத்து விடுங்கள். பிறகு கீழே இறக்கி வழக்கமாக நீங்கள் ஆவி பிடிப்பது போல பெரிய போர்வைக்குள் சென்று காற்று வெளியில் போகாதவாறு மூடிக் கொள்ளுங்கள்.
முதலில் இடது நாசியை கட்டை விரலால் மூடிக் கொண்டு வலது நாசியால் மூச்சை உள்ளிழுங்கள். பின்னர் வாயால் காற்றை வெளிவிடுங்கள். பின் வலது நாசியை மூடிக் கொண்டு இடது நாசியால் மூச்சை உள்ளே இழுத்து இதே போல செய்யுங்கள். இப்படி மாறி மாறி ஒரு பத்து முறை செய்யுங்கள். அதன் பிறகு வாயால் காற்றை நன்கு இழுத்து பின்னர் வெளிவிடுங்கள். இதுபோல் பத்து முறை செய்யுங்கள்.
மேற்கூறிய பொருட்களில் உங்களிடம் இருக்கும் ஏதாவது ஒரு ஐந்து பொருட்களை சேர்த்தால் கூட போதும். தொண்டை முதல் நுரையீரல் வரை ஏற்பட்டுள்ள தொற்றுக்களையும், நோய்க் கிருமிகளையும் நீக்கி ஆரோக்கியத்தைப் பேணிக் காக்கும் அற்புத மருந்தாக செயல்படும். தினமும் வெளியில் சென்று வருபவர்கள் ஒரு முறையும், பிரச்சனைக்கு உரியவர்கள் ஒரு நாளைக்கு 3 முறையும் செய்வது நல்லது.