• vilasalnews@gmail.com

எல்லா வயதினரும் விரும்பி சாப்பிட வேண்டிய பழம்... இனி இதை மிஸ் பண்ணவே மாட்டீங்க..!

  • Share on

சீத்தாப்பழம் அதிகம் சாகுபடி ஆகக்கூடிய இடம் தென்னிந்தியா. இதன் உயரம் சுமார் 4.5மீ வரை வளரும். சீத்தாப்பழத்தின் சீசன் ஆகஸ்ட் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை இருக்கும்.

சீத்தாப்பழத்தின் விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்  பூச்சி கொல்லியாக பயன்படுத்தப்படுகிறது. இதன் நிறம் பச்சையும் மஞ்சளும் கலந்த நேரத்தில் இருக்கும். இதற்குள் விதைகள் அதிகம் இருக்கும். விதைகள் மேல் வெள்ளை நிறத்தில் தசை இருக்கும் அதை மட்டுமே நம்மால் உண்ண முடியும்.

சீதாப்பழம் குழந்தைகளுக்கு பால் குடியை மறக்க உதவுகிறது. அதாவது, இப்பழத்தின் தசையை உணவுடன் சேர்த்து குழந்தைகளுக்கு ஊட்டினால் போதும். சீதாப்பழத்தை சாப்பிட்டால் ரத்தப் பெருக்கமும் புத்துணர்ச்சியும் ஏற்படும். இதில் இரும்புச் சத்து அதிகமாக உள்ளது. நீரிழிவு மற்றும் மாரடைப்பு நோயை தடுக்கும். சீதாப்பழத்தில் வைட்டமின் சி இருப்பதால் கால்சியம் நமக்கு கிடைக்கிறது. 

இப்பழத்தை சாப்பிட்டு வருவதால் கண் பார்வை குறைபாடுகள் நீங்கும். உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் வெளியேறும். ஆகவே பல்வேறு நன்மைகளை தரக்கூடிய சீத்தாப்பழத்தை எல்லா வயதினரும் விரும்பி சாப்பிடலாம்.

  • Share on

தொப்பையை குறைக்க விரும்புபவரா நீங்கள்? அப்படினா அந்த சக்தி உள்ள இந்த பழத்தை சாப்பிட்டுபாருங்க!

  • Share on