• vilasalnews@gmail.com

தொப்பையை குறைக்க விரும்புபவரா நீங்கள்? அப்படினா அந்த சக்தி உள்ள இந்த பழத்தை சாப்பிட்டுபாருங்க!

  • Share on

அழகாய் இருக்கிறாய் தொப்பை பயமாய் இருக்கிறது என்று யாராவது சொல்லிவிடுவார்களோ என்று கவலை கொள்ளும் இளம் பெண்கள் ஒருபுறம். பெண்கள் முன்னிலையில் தொந்தியும் தொப்பையுமாய் நன்றாகவா இருக்கிறது என்று கவலைகொள்ளும் ஆண்கள் மறுபுறம். என்ன செய்தால் தொப்பையை இல்லாமல் செய்யலாம் என்பது தான் அவர்களுடைய எண்ணத்தின் தேடலாக இருக்கும். இந்த பழத்தில் தொப்பையை குறைக்கும் ஆற்றல் இருப்பதாக சொல்கிறார்கள். அது என்ன என்று பார்ப்போமா.

அண்ணாச்சி பழம்


அண்ணாச்சி பழத்திற்கு வெப்ப நாடுகளின் ராணி என்ற பெயர் உண்டு. இதனை தமிழில் பறங்கித் தாழை, செந்தாழை என்றும் அழைப்பாளர்கள். ஆங்கிலத்தில் பைன் ஆப்பிள் என்பர். கிபி 1548 ஆம் ஆண்டிற்கு முன்பு இருந்தே இதனை இந்தியாவில் பழத்திற்காக சாகுபடி செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

உலகில் அண்ணாச்சி பழம் உண்பவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளவர்கள் அமெரிக்கர்கள் தானாம். எனவே தான் அந்த நாட்டில் சிறுநீரகத்தில் கல் கோளாறு கொண்ட நோயாளிகள் குறைவாக உள்ளனராம். இந்தியாவில் மேற்கு கடற்கரை ஓரங்களிலும், தமிழகத்தில் கன்னியாகுமரியிலும் இந்த அண்ணாச்சிபழம் விளைகிறது.  

தொப்பையை குறைக்கும் அரிய ஆற்றல் பெற்றது இந்த அண்ணாச்சி பழம். இரவு 7 மணிக்கு ஒரு அண்ணாச்சி பழத்தை சிறு துண்டுகளாக வெட்டி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்கு கிளறி விட்டு ஒரு குவளை தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

பிறகு அதனை அடுப்பிலிருந்து இறக்கி அதனை அப்படியே இரவு முழுவதும் வைத்திருந்து மறுநாள் காலையில் அதை பிழிந்து சார் எடுத்து வெறும் வயிற்றில் தொடர்ந்து பத்து நாட்கள் சாப்பிட தொப்பை கரைய ஆரம்பிக்கும். அதற்குப் பிறகு நாள்தோறும் ஒரு கப் அண்ணாச்சி பழ துண்டுகள் சாப்பிட்டு வந்தால் உடல் எப்போதும் ஆரோக்கியமாக திகழும். அண்ணாச்சி பழத்தில் அதிகமாக உள்ள கால்சிய சத்தும், மாங்கனீசு உப்புமே தொப்பையை குறைக்கிறது.

மேலும், மலச்சிக்கல் உள்ளவர்களுக்கான மாமருந்தாகவும் இந்த அண்ணாச்சி பழம் செயல்படுகிறது. வயிறு மந்தமாக இருக்கிறது என்று உணர்வுகளுக்கு உணவுக்குப் பிறகு ஒரு கப் அண்ணாச்சி பழச்சாறு அருந்தினால் உடனடியாக உணவு செரித்து விடும்.

  • Share on

நீங்கள் பிளாக் டீ குடிப்பவரா? அதனால் ஏற்படும் விளைவுகள் தெரியுமா?

எல்லா வயதினரும் விரும்பி சாப்பிட வேண்டிய பழம்... இனி இதை மிஸ் பண்ணவே மாட்டீங்க..!

  • Share on