நெல்லிக்காய்;
நெல்லிக்காய் சாப்பிடுதல் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. உடல் எடையை குறைக்க பயன்படும் ஒரு அரு மருந்து என சொல்லலாம். உடலில் உள்ள கெட்ட கொழுப்புசத்தை கரைத்து விடுகிறது. பார்வை திறனை மங்காமள் தெளிவாக பார்க்க உதவுகிறது.
தினமும் நெல்லிக்காய் ஜீஸ் 20முதல் 30மில்லி அளவு ஜீஸ் சாப்பிட்டுவந்தால் மிகவும் ஆரோக்கியமானதாகும்.நாம் வாழ் நாளில் நம் உடலில் இறுதி வரை இருக்க கூடியவை எலும்புகள் அதனை வலுவாக உறுதியாக இருக்க நெல்லிக்காய் உதவுகின்றது.
பெரிய நெல்லிக்காயில் 600மில்லி கிராம் விட்டமின் சி அதிகமாக உள்ளது.நெல்லிக்காய் சாப்பிட்டு தண்ணீர் குடித்தால் இனிக்கும் தன்மை உடைய அருமருந்து என்று சொல்லலாம். உப்பு சுவை தவிர மற்ற ஐந்து சுவையும் நெல்லிக்காயில் உள்ளது. வாதம், பித்தம், உடல் சூட்டை அமர்த்தி உடலை குளிர்ச்சி படுத்துகிறது.இரத்தை சுத்தம் செய்கின்றது.
சிறுகுடல், மற்றும் பெருகுடலில் அமைந்திருக்ககூடிய கழிவுகளை நீக்குகிறது. பசியை தூண்டி நன்றாக சாப்பிட வைக்கிறது.நியாபக சக்தியை அதிகரிக்கிறது.உடலில் நோய் இல்லா தன்மையை அதிகரித்து சுறுசுறுப்பாக வைக்கின்றது.
பெண்களுக்கு உடல் சூடு காரணமாக ஏற்படும் வெள்ளைப்படுதல் தோன்றும். அதுவும் மாதவிலக்கு கோளாறு,சினைப்பை கட்டி தொந்தரவு இருப்பவர்களும் நெல்லிக்காயை உணவில் அதிகம் சேர்ப்பதால் பிரச்சினைகள் குறையும். கருப்பை கோளாறுகளையும் சரி செய்து கர்ப்பபையை வலுப்படுத்திக்கிறது. மிக முக்கியமாக சர்க்கரை நோயை கட்டுப்படுத்த நெல்லிக்காய் உதவுகிறது.