• vilasalnews@gmail.com

பற்களை ஆரோக்கியமாக பாதுகாப்பது எப்படி?

  • Share on

நாம் பேசும் போதும் சரி சிரிக்கும் போது சரி முகத்தில் தென்படுவது நம் பற்கள் தான்  அப்பற்களை எப்படி வெண்மையாகவும்,அழகாகவும் மாற்றலாம் என சில டிப்ஸ்

பற்கள் பாதிக்கப்பட்டால் பல்வேறு பாதிப்புகளுக்கு வழிவகுக்க கூடும். பற்கள் தான் மனிதரின் ஆரோக்கியத்தை நிர்ணயிகின்றன. பற்களை பாதுகாத்தால் ஆரோக்கியம் மேம்படும்.

பல் சொத்தையை கண்டறிய  பற்களில் தொடர்ந்து வலி ஏற்படுகிறது.வாய் வெளியேயும் தொடர்ந்து உறுத்தல் ஏற்படும். பின் வீக்கம் ஏற்படும். சூடான உணவு சாப்பிடும் போது கூச்சம் ஏற்படும். அப்படி இதன் அறிகுறிகள் இருந்தால் நிச்சயம் விரைவில் பல் சொத்தை ஆகிவிடும்.

நாம் காலையில் எழுந்ததும் தேனீர் அருந்துகிறோம் அதனை தவிர்த்து தண்ணீர் அருந்த  வேண்டும்.சிகரெட்,மது அருந்துதல், போன்றவைகளை நாம் தவிர்க்க வேண்டும்.


தினமும் இரண்டு முறை பல் துலக்க வேண்டும். நாம் தினமும் சாப்பிட்ட பின் வாயை நன்றாக கொப்பளிக்க வேண்டும். இரண்டும் மாதத்திற்கு ஒரு முறை பிரஷ் மாற்ற பட வேண்டும். பழங்கள் அளவுக்கு அதிகமா தினமும் சேர்த்து கொள்ள வேண்டும்.

கேழ்வரகு,முட்டைகோஸ், மீன் கீரைவைகள்,காலிபிளவர், உணவில் எடுத்து கொண்டு வேண்டும்.தினம் இரண்டு டம்ளர் பால் அருந்த வேண்டும்.

வாழைப்பழ தோலை கொண்டு பற்களில் தேய்த்து எப்போது போல் பிரஷ் பண்ணினால் மஞ்சள் கறை போய் வெண்மையாக காட்சியளிக்கும்.கேரட் துண்டு துண்டாக வெட்டி பற்களின் மேல் மசாஜ் பண்ணலாம்.

  • Share on

இந்த கனியால் இவ்வளவு நன்மையா...

  • Share on