பெண் முன்னேற்றம் என்பதை இன்று தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி அதற்கு சாமரம் வீசும் கூட்டணி காட்சிகளாக இருந்தாலும் சரி மேடையில் பேசுவது என்று மட்டுமே புரிந்துகொண்டிருக்கின்றன. தமிழக மக்களையும் இத்தனை ஆண்டுகளாக ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
கடந்த 2017 ம் ஆண்டு மஹாசிவாரத்திரியின் போது, நமது பாரத பிரதமர் மோடி, 'பெண்களுக்கு அதிகாரம் அளிக்காமல், மனிதகுலத்தின் மனிதகுலத்தின் முன்னேற்றம் முழுமையடையாது' என கூறினார் அன்று பெண் முன்னேற்றம் பற்றி பாஜக பேசலாமா, என்ன செய்தார் மோடி என்றெல்லாம் எதிர்க்கட்சிகள் கொக்கரித்தன ஆனால் இன்று பாரதம் தான் பெண் முன்னேற்றத்தில் முதன்மையான நாடு என்ற நிலையை அடைந்து சாதனை படைத்துள்ளது.
இதுவரை மகளிர் இடஒதுக்கீடு மசோதா தேர்தலில் அலங்கார வாக்குறுதியாக இருந்ததை செயலில் காட்டியவர் விஷ்வகுரு மோடி.
கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேறிவிட்டு அவர் உதிர்த்த வார்த்தைகள் இவை.
'மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவதில் பல தடைகள் இருந்தன. ஆனால், நோக்கம் சுத்தமாகவும், முயற்சிகள் வெளிப்படையாகவும் இருக்கும்போது, அதன் முடிவுகள் தடைகளை தாண்டிச் செல்லும் என்பதை நாம் பார்த்தோம். கடந்த 21 மற்றும் 22-ம் தேதிகளில் இந்தியா வரலாறு படைத்துள்ளது. இந்த வாய்ப்பை மக்கள் நமக்கு அளித்தது நமது அதிர்ஷ்டம். நாட்டில் உள்ள பெண்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். பெண்களின் பாதுகாப்பு, மரியாதை, செழிப்பு ஆகியவற்றுக்காக திட்டங்களை கொண்டு வந்து அவர்களை விடுவிக்க நமது அரசு அனைத்து முயற்சியும் எடுக்கிறது' எனக்கூறி எதிர்க்கட்சிகளின் வாயை அடைத்தார்.
இப்படி வரலாற்று சாதனையை நிகழ்த்தியது மட்டுமல்ல பாஜக ஆட்சி பெண்கள் முன்னேற பல செயல்திட்டங்களை எழுத்து வடிவில் மட்டும் இல்லாமல் செயல் வடிவிலும் செய்து காட்டி சாதனை படைத்துள்ளது.
- பிரதமர் மோடியின் பத்து ஆண்டு ஆட்சியில் பெண்களால், 26.87 கோடி ஜன்தன் யோஜனா வங்கி கணக்குகள் கணக்குகள் துவக்கப்பட்டுள்ளன!
- பிரதமர் மோடியின் பத்து ஆண்டு ஆட்சியில் 9.60 கோடி இலவச சமையல் காஸ் சிலிண்டர் இணைப்புகள் வழக்கப்பட்டுள்ன!
- பிரதமர் மோடியின் பத்து ஆண்டு ஆட்சியில் பெண்களின் கண்ணியத்தை பாதுகாக்க, 11.72 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டது மகத்தான சாதனை!
- பிரதமர் மோடியின் பத்து ஆண்டு ஆட்சியில் 11.88 கோடி குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன!
- பிரதமர் மோடியின் பத்து ஆண்டு ஆட்சியில் பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் மூலம் 40 மில்லியன் புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் 75% பெண்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது!
- பிரதமர் மோடியின் பத்து ஆண்டு ஆட்சியில் 3.03 கோடி பெண்களுக்கு மகப்பேறு நலத்திட்டம் வழங்கப்பட்டுள்ளது!
- பிரதமர் மோடியின் பத்து ஆண்டு ஆட்சியில் வங்கிகளில், 27 கோடி பெண்களுக்கு, 'முத்ரா' கடன் வழங்கப்பட்டுள்ளன! மொத்தம் வழங்கப்பட்ட முத்ரா கடன் உதவி திட்டத்தில் 65% பயனாளிகள் பெண்களாக உள்ளனர்.
- பிரதமர் மோடியின் பத்து ஆண்டு ஆட்சியில் பெண்கள் ராணுவத் துறையிலும் உயர் பதவிகளை பெற்று சிறப்பாக பணிபுரிந்து வருகின்றனர்!
இதுமட்டுமில்லாமல் பெண்களுக்கான சம்பளத்துடன் கூடிய பிரசவகால விடுப்பு பாரதி ஜனதா கட்சியின் ஆட்சியில் சுமார் ஆறு மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
சந்திராயன் 3 திட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பெண் விஞ்ஞானிகள் முக்கியப் பங்கு வகித்தனர்.
பிரதமர் மோடி பதவியில் அமர்ந்த 2014 ஆம் ஆண்டு எல்.பி.ஜி கேஸ் இணைப்பு 14.5 கோடியாக இருந்தது. இன்று 33 கோடி புதிய இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இப்படி பாரத வரலாற்றில் எந்த மத்தியிலும் / மாநிலத்திலும் ஆட்சி செய்த எந்த ஒரு கட்சியும் செய்யாத சாதனையை செய்து காட்டி பெண்களை தகப்பன் ஸ்தானத்தில் இருந்து தூக்கிவிட்டவர் நம் பிரதமர்.
இன்றைக்கு இதர கட்சிகளில் அரசியல் கூட்டம் என்றால் கூட பெண்கள் அந்த அரசியல் கூட்டத்தின் நடுவே வர அஞ்சி நடுங்கும் வேளையில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டத்தில் மட்டும்தான் பெண்களை பார்க்க முடியும்! இது நிதர்சனமான உண்மை! தமிழகத்தில் தற்காலத்தில் நடக்கும் எல்லா கட்சி அரசியல் நிகழ்ச்சிகளையும் பாருங்கள் பாஜகவின் அரசியல் நிகழ்ச்சியையும் பாருங்கள் இந்த உண்மை உங்களுக்கே புரியும் எது பெண்களுக்கான கட்சி, எது பெண்களை பாதுகாக்கும் கட்சி என!
இது எல்லாவற்றிக்கும் மேலாக தங்க கிரீடத்தில் வைரக்கல் வைத்து அலங்கரிப்பது போலாக நமது பாரதத்தின் குடியரசு தலைவராக திரௌபதி முர்மு என்கிற ஒரு பழங்குடி இனத்தை சேர்ந்தவரை அமரவைத்து அழகு பார்த்த அந்த ஒரு தருணமே சொல்லும் பாஜக பெண்களுக்கான கட்சி என்பதை
இன்று முதல் குடிமகளாக அமர்ந்து நமது பாரதத்திற்கு பெருமை சேர்த்த திரௌபதி முர்மு அவர்கள் படித்த அதே கல்வி நிலையத்தில் படித்து வந்த நானும் பாஜகவை என் தாய்வீடு போல நினைத்து களமாடுவதை விட வேறு என்ன பெருமை எனக்கு இருக்க முடியும்?
- அண்ணபூர்ணா பிள்ளை
மாநில ஒருங்கிணைப்பாளர்
தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகபிரிவு ( மகளிர்அணி)