ஒப்பற்ற உலக தமிழர் பெருங்குடிகளின் தை திருநாளில், 2021 ஆம் ஆண்டில், தமிழர் வீட்டு செல்வம் தைமகள் ஈன்றெடுத்த, இணைய உலகில் செய்திக்கான ஒரு புதிய இணையதளம், விளாசல் நியூஸ்.காம் - www.vilasalnews.com என்ற ஒரு தளத்தை நாங்கள் உருவாக்கி தமிழ் சமூக பெருமக்களின் பார்வைக்கு சமர்ப்பித்தோம்.
தமிழ் பெருங்குடி மக்களாகிய உங்கள் நன்மதிப்பையும் பேராதரவையும் பெற்று, இன்று - தை 1ஆம் நாள் (15-01-2024) 4வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறோம்.
உள்ளூர் செய்திகள் முதல் தாங்கள் அறிய விரும்பும் அனைத்துவிதமான நிகழ்வையும் தெரிந்து கொள்ள, நல் சிந்தனையோடு தந்திடஉதவும், "உண்மை நின்றிட பேசும்" ஓர் இணைய செய்தி தளமான விளாசல் நியூஸ்.காம் - www.vilasalnews.com க்கு வழக்கம் போல, மக்களாகிய, வாசகர்களாகிய தாங்கள் ஆதரவு தந்து மென்மேலும் வளர உறுதுணையாக இருந்திட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் நன்றி!
தமிழுக்கும்
தமிழர்களுக்கும்
பெருமை சேர்க்கும் வகையில், உலக நாகரிகங்களில் இடம் பெறத்தக்க உயர்ந்த நாகரிகத்தை உடைய, மிகவும் தொன்மை வாய்ந்த ஓர் இனத்தின் பெருவிழா
வளம், செழிப்பு, மகிழ்ச்சி, ஆனந்தம் ஆகியவற்றை அடையாளமாக கொண்டு திகழும், தமிழர் திருநாளான " பொங்கல் திருநாள் " வாழ்த்துக்களை உங்கள் அனைவருக்கும் கூறி பெருமகிழ்ச்சி கொள்கிறோம்
விரல்களை விசைப்பலகையில் வீசுங்கள்...
நம்ம www.vilasalnews.com பக்கத்தை படித்து பயன்பெறுங்கள்!
- ஆசிரியர்
விளாசல்நியூஸ்.காம்