பயணங்கள் எப்போதும் அளப்பறியாத இனிமையும் சுகத்தையும் தரும். அதே பயணத்தில் மனதிற்கு இதம் தரக்கூடிய, எழுபது, என்பது கால கட்ட பாடல்கள் நமது காதுகளுக்கு விருந்து படைத்தால், அதன் ஆனந்தத்தை சொல்ல வேண்டியதே இல்லை அப்படியொரு சுகத்தை நம் மனதிற்கு தரும் தருணம் அவை.
மழை குளிரும் சுடான வடை டீயும் போல, பேருந்து பயணமும் பாடல்களும் ஒரு தனி ரக ரசனை தான்.
பேருந்து முன்னோக்கி செல்ல, நம் கன்னத்தில் காற்றுகள் இதமாக வருடி, ஜன்னலோர காட்சிகள் பின்னோக்கி செல்ல, உள்ளே இளையராஜா, எஸ்பிபி பாடல்கள், சித்ரா ஜானகி குரல்களில் ஒலிக்க, அந்த பாடலின் வரிகளை நம்மை அறியாமல் நாம் மனத்திற்குள் அசைபோட்டு இருக்கும் அந்த அதிகாலை, இரவு நேர பயணத்தின் சுகத்தை அனுபவித்த எந்தவொரு மனமும் கொண்டாட தவறாது. இத்தனை ரசனையையும் நமக்கு படையல் போடும் இசைப்பிரிய ஓட்டுநர்களுக்கும் ஒரு சலியூட் போட்டால் அதை மிகையல்ல.
பணி சுமைகளுக்கு நடுவே மனதை இளைப்பாற நீங்கள் முன்னெடுக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக, இனிமையான பாடலோடு கிடைக்கும் இரவு நேர நெடுந்தூர பேருந்து பயணம் ஒன்றையும் தேர்வு செய்ய மறந்து விடாதீர்கள்.