• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மக்களின் தாகத்தை தணித்திருக்கும் முத்து நகர் கடற்கரை!

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சி சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் முத்துநகர் கடற்கரை பூங்கா மேம்படுத்தும் பணி நிறைவு பெற்றதை தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு திறப்பு விழா நடைபெற்று முடிந்தது.

லட்சக்கணக்கான மக்கள் வசிக்கக்கூடிய தூத்துக்குடி மாநகர மக்களுக்கு பெரிய பொழுது போக்கு இடமே, இங்கு அமைந்துள்ள கடற்கரை மட்டுமே. ஆனால், சென்னை மெரினா கடற்கரை போன்று தூத்துக்குடி கடற்கரை பகுதி அமைவது எப்போது என்று, தூத்துக்குடி மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்  விதமாக தற்போது தூத்துக்குடி முத்து நகர் கடற்கரை அமைந்துவிட்டதை, வார விடுமுறை நாளில் அங்கு கூடும் மக்களின் எண்ணிக்கை மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

வார விடுமுறை நாளான ஞாயிற்றுகிழமைகளில், தூத்துக்குடி முத்து நகர் கடற்கரை அமைந்துள்ள அந்த கடற்கரை ஒட்டிய சாலையானது, போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் அளவிற்கு,  இரண்டு,  நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை பெருக்கெடுத்துள்ளது.

கரையை முத்தமிடும் கடல் நீரின் அழகை கண்டு ரசிக்க முடியாத அளவிற்கு, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை, கடலும் கரையும் சேரும் இடங்களின் ஒரங்களில் மக்கள் கூட்டமாய் நின்று கடலை ரசித்து, கடலில் கால்களை நனைத்தும், மூழ்கி குளித்து விளையாடும் காட்சிகள் தான் அரங்கேறுவதை மட்டுமே கான முடிகிறது

வாரம் முழுவதும்  பல்வேறு பணிகளால் இயந்திரமாய் இயங்கும் மனிதனின் மனதின் இறுக்கத்திற்கு ஒரு நாளாவது இதமான இளைப்பாறுதல் பெற எங்கே செல்வது என்ற ஏக்க பெருமூச்சுக்கு தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை விடைகொடுத்திருப்பதை அங்கு கூடும் மக்களின் கூட்டத்தால் தெரிந்து கொள்ள முடிகிறது.

கலை, இலக்கியம், பண்பாட்டின் மீது ஆர்வமும் பற்றும் கொண்ட தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, முத்து நகர் கடற்கரை கலை இலக்கிய, பண்பாட்டு அமைப்பை ஏற்படுத்தி, தூத்துக்குடியில் வளரும் இளம் கலைஞர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு ஊக்கம் தரும் வகையில், அவர்களை வைத்து முத்து நகர் கடற்கரை அரங்கத்தில், வார நாட்களில் மாலை வேளையில் கண்கவரும் கலை இலக்கிய கிராமிய நிகழ்ச்சிகளை அரங்கேற்றி பொதுமக்களின் கண்களுக்கு விருந்து படைப்பதோடு, கலைஞர்களுக்கும் அவர்களின் திறமையை பொதுமக்களிடம் காட்ட ஓர் வாய்ப்பை உருவாக்கி தரலாம் என்ற எதிர்பார்ப்பும் கடற்கரை வரும் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் தற்போது கூடும் பொதுமக்களின் கூட்டத்தை பார்க்கும் போது, தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை தூத்துக்குடி மக்களுக்கான  பொழுபோக்கு இடத்தின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து, அவர்களின் பொழுபோக்கு இடத்தின் தாகத்தை தணித்திருப்பதை உணர முடிகிறது.

  • Share on

தமிழ் பெருங்குடி மக்களின் பேராதரவுடன் 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதில் பெரும்மகிழ்ச்சி!

பேருந்து பயணமும்... பாடலின் இனிமையும்...

  • Share on