• vilasalnews@gmail.com

விஜய் டிவி நிகழ்ச்சிக்குள் நுழையும் டிக் டாக் பிரபலம் ஜி பி முத்து… இணையத்தில் தீயாய் பரவும் தகவல்!!

  • Share on

டிக் டாக் பிரபலம் ஜி பி முத்து விஜய் டிவியில் ஒளிப்பரப்பாக உள்ள ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் முதல் மற்றும் இரண்டு சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ளன.

இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளாக பங்கேற்றுள்ள பாலா புகழ் சிவாங்கி சுனிதா மணிமேகலை இவர்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு என்றே கூறலாம்.

இரண்டு சீசன் முடிந்த நிலையில் மூன்றாவது சீசன் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், டிக் டாக் பிரபலம் ஜி பி முத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், இது உண்மையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

  • Share on

தாறுமாறா கவர்ச்சி காட்டிய மஞ்சிமா மோகன்!

கொரோனா தடுப்பு பணிக்கு நிதி வழங்கிய நடிகர் விஜய் சேதுபதி

  • Share on