26 வயதாகும் மஞ்சிமா மோகன் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவரது கல்லூரி படிப்பை சென்னையில் முடித்திருக்கிறார்.
இவர் முதன்முதலில் 2015ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான “ஒரு வடக்கன் செல்பி” என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார்.
தமிழில் 2016ஆம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்த “அச்சம் என்பது மடமையடா” திரைப்படம் தான் இவரது முதல் தமிழ் படம்.
மலையாள படங்களுக்கு இவரது தந்தை ஒரு cinematographer ஆவார். இவர் குழந்தை நட்சத்திரமாக 1998 முதல் 2002 வரை நடித்து இருக்கிறார். இவர் “ஹாய் கிட்ஸ்” என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர். தற்போது தமிழில் மூன்று திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் மஞ்சிமா மோகன் தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் வெப் சீரியஸில் நடிக்க ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளார். அதன் பிறகு துக்ளக் தர்பார், FIR என இரு படங்கள் மட்டும் இருக்கும் நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய கூந்தலை கோதி விட்டு காந்த பார்வையை வீசி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், “World-class Beauty, Homely Piece-U…” என அம்மணியின் அழகை வர்ணித்து வருகிறார்கள்.