நடிகரும், சினிமா விமர்சகருமான வெங்கட் சுபா கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனோ இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் சாமானிய மக்கள் முதல் திரைப் பிரபலங்கள் என அனைவரும் இதற்கு பலியாகி வருகின்றனர். அந்த வகையில் கடந்த வருடம் பிரபல பின்னணி பாடகர் ஆன எஸ்.பி.பி பாலசுப்ர மணியம், நடிகர் விவேக், இயக்குநர் கே.வி.ஆனந்த், பாடகர் கோமகன், நடிகர் மாறன், பாண்டு, நெல்லை சிவா, நடிகர் பவுன்ராஜ் என தொடர்ந்து திரை பிரபலங்கள் மரணித்து வருகின்றனர். இந்நிலை யில் தற்போது நடிகர் வெங்கட் உயிரிழப்பு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 17 ஆம் தேதி கொரோனாவால் பாதிப்பட்டு சென்னை தனியார் மருத்துவம னையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நடிகர் வெங்கட் யூ டியூப் சேனலில் சினிமா விமர்சனம் செய்து வந்த அவர் மொழி, அழகிய தீயே, கண்ட நாள் முதல் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் டிவி சீரியல்களில் நடித்துள்ளார்.
தற்போது ஹர்பஜன் சிங், லாஸ்லியா இணைந்து நடித்து விரைவில் வெளிவர உள்ள ஃபிரண்ட்ஷிட் படத்திலும் வெங்கட் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. பெரும்பாலும் இவர் அப்பா வேடங்களிலும் சில படங்களில் வில்லன் வேடங்களிலும் நடிப்பதில் ஆர்வம் உடையவர்.