பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். குடும்ப கதையை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் டிஆர்பி உச்சத்தில் விளங்கி வருகிறது.
கொரோனாவின் இரண்டாவது அலை தமிழகத்தில் வேகமாக பரவி வருகின்ற காரணத்தினால், படப்பிடிப்புகள் உள்ளிட்ட பல விஷயங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை ஆகிய இரு படப்பிடிப்புகளும் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இன்றிலிருந்து, புதிய எபிசோட்கள் வராது என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்களுக்கு மிகவும் வருத்தத்தை தந்துள்ளது.