பிரபல நடிகை ஒருவரின் குழந்தை பருவ புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா, தற்போது தெலுங்கில் படுபிசியான நடிகையாக இருக்கிறார். தெலுங்கை தவிர, இந்தி, தமிழ் படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு பலமொழிகளில் இருந்து படவாய்ப்புகள் குவிந்து வருகிறது. நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் ‘கீதா கோவிந்தம்’ படத்தில் நடித்து மொத்த இளைஞர் களையும் கட்டிப்போட்டவர் ராஷ்மிகா.
இந்த படத்திற்கு பிறகுதான் இவரின் மார்கெட் ஒட்டுமொத்தமாக ஏறியது. நடிகர் கார்த்தியின் ‘சுல்தான்’ படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். அதன்பிறகு அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். தொடர்ந்து தெலுங்கில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். இதேபோன்று இந்தியில் ‘மிஷன் மஜ்னு’, அமிதாப்புடன் ‘டெட்லி’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஊடரங்கு காரணமாக படப்பிடிப்புகள் இல்லாததால் வீட்டியே முடங்கி கிடக்கிறார் ராஷ்மிகா. இதனால் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் அவர், தனது குழந்தை பருவ புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதோடு, ‘கொரானா எப்போது நம்மை விட்டுப் போகும் என காத்திருக்கிறேன்’ என்று கவலையுடன் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். ராஷ்மிகாவின் இந்த அழகான புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.